2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கருத்தமர்வு

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

தேசிய போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வுகள் தொடர்ச்சியகாக நடைபெற்று வருகின்றது.

இதற்கமைய, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டபத்தில், நேற்று (27) செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துசிறப்பித்துள்ளார்கள்.

இதில், தற்போதைய போதைபாவனை, அதில் இருந்தான பாதுகாப்பு தொடர்பில் உளநல மருத்துவ அதிகாரி வே.ஜெகரூபனால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து, இன்று, முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலகங்களில் இது தொடர்பிலான கருத்தமர்வுகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .