2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கரும்புத் தோட்டக் காணியில் உப உணவுப் பயிர்ச் செய்கை

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணியில், 150 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் உப உணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்கந்தபுரம் பொதுமண்டபத்தில், அண்மையில் கூடிய ஏழு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அதாவது, அக்கராயன் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை தொடங்கி உள்ள நிலையில் கரும்புத் தோட்டக் காணியான 196 ஏக்கரில் 150 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் உபஉணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இக்காணியில் தென்னைகள், கட்டடங்கள், பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத நிலப்பரப்பை கழித்தே 150 ஏக்கரில் உபஉணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், எதிர்காலத்தில் கரும்புத் தோட்டக் காணியில் நஞ்சற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .