2025 மே 08, வியாழக்கிழமை

கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கு அழைப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாத தடுப்புபிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளிக்கிழமை (06), கிளிநொச்சி பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் உள்ள திருவள்ளுவர் வரைபடத்தில் 'ஈழம்' என்ற சொல் பொறிக்கபட்டிருந்தமை குறித்து விசாரணை செய்வதற்கு, தவிசாளரை 4ஆம் மாடிக்கு அழைத்திருந்தனர்.

பின்னர், கிளிநொச்சி பொலிஸாரால் வீதிகளுக்கு பெயரிட்டமை, பொது நிகழ்வுகளில் விளக்கு ஏற்றியமை இந்த பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டமை, பொத்துவில் பேரணியில் பங்குகொண்டமை, தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தை மேற்கொண்டமை தொடர்பில் பல்வேறு விசாரனைகளை தவிசாளரிடம் மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், அண்மையில், கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர், தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இது தெர்ர்பில் பொலிஸார் முன்னிலையில் மேற்கொள்ளபட்ட விசாரணையின் போது, 'நான் கருணா குழுவைச் சார்ந்தவன்' என்று, அந்த நபர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்சியாக, நேற்று  (02), தவிசாளருக்கு பயரங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரனைக்கான அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X