2025 மே 01, வியாழக்கிழமை

கரைச்சி பிரதேச சபைக்குள் போராட்டம்

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் செல்வநாயகம்  விசாரணைக்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் (10), பிரதேச சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்கள் வரை ஒத்தி வைக்கப்பட்டு, சபை உறுப்பினர்கள் தங்கள் வாயை கறுப்புத் துணியால் கட்டி, சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர், இந்தச் சபை அமைந்த நாள் தொடக்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் தமது சபை பாரிய நெருக்ககடிகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தார்.

வள்ளுவர் சிலையில் "ஈழம்"என்ற சொல் இருப்பதாக்க் கூறி, முதன் முதலில் விசாரணை ஆரம்பித்ததாகத் தெரிவித்த அவர், பின்னர் அக்கிராச மன்னன் திறப்பு விழா தொடர்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பது தொடர்பிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பிலும்,  உறுப்பினர்கள் சிலர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாகவே,  உறுப்பினர் செல்வநாயகத்துக்கு, தற்போது அழைப்பு வந்திருப்பதாகத் தெரிவித்த அவர், நாடு கொரோனா அச்சுறுத்தலில்  இருக்கின்ற வேளையில், அவரை கிளிநொச்சியில் வைத்து விசாரிக்காமல், கொழும்புக்கு அழைப்பதென்பது, பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தவிசாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .