2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘கரைச்சி பிரதேச சபையில் கழிவகற்றல் பொறிமுறை இல்லை’

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

“கிளிநொச்சி நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில், உரிய முறைகளில் கழிவுகள் அகற்றப்படாமல் காணப்படும் அதேவேளை, கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில், கரைச்சி பிரதேச சபை அக்கறை செலுத்துவதில்லை” என்று, பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

“கிளிநொச்சி - கரைச்சிப்பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள, கிளிநொச்சி பொதுச்சந்தை, பஸ் தரிப்பிடம், இரணைமடு பொதுச்சந்தை, இரணைமடு சந்தி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தினமும் சேரும் கழிவுகளை அகற்றுவதில், எவரும் அக்கறை செலுத்துவதில்லை. கழிவகற்றல் தொடர்பான முகாமைத்துவம் பின் தங்கியே காணப்படுகின்றது” என்று, அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள், பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு, கழிவுகள் உரிய முறையில், உரிய காலங்களில் அகற்றப்படாமையினால், துர்நாற்றம் வீசுவதுடன், இலையான்களின் பெருக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றன.  
இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் இரு நாட்களுக்கு ஒரு தடவை கழிவுகள் அகற்றப்படுவதனால் குறிப்பிட்ட இடங்களிலுள்ள கழிவுகள் மாத்திரமே அகற்றப்படுகின்றன.

ஏனைய இடங்களில் உள்ள கழிவுகளை, அகற்றவோ அல்லது பொது இடங்களை துப்புரவு செய்யவோ நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படுவதில்லை.  

 நகரில் இருந்து கொண்டு செல்லப்படும் கழிவுகள், பரந்தன் - உமையாள்புரம் பகுதியில் உள்ள தனியார் காணிகளிலும் ஏ-9 வீதி புகையிரத வீதிக்கு அருகிலும் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலும், கொட்டப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .