Editorial / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்துக்குக் கிடைத்துள்ள தீயணைப்புப் பிரிவுக்கான ஆளணிப் பற்றாக்குறை நிரப்பப்படாததால், அவசரத் தேவைகளின் போது கூட, குறித்த தீயணைப்புப் பிரிவைச் செயற்படுத்துவதில், தடைகளும் தாமதங்களும் காணப்படுவதாக, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவிதத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான தீயணைப்புப் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ள போதும், இதற்கான ஆளணி வளம் இதுவரை பூர்த்தி செய்யப்படாது காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று, மீள்குடியேற்ற அமைச்சின் 97 மில்லியன் ரூபாய் நிதிச் செலவில், தீயணைப்புப் படைக்கான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன, மாவட்ட அரசாங்க அதிபரால், கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டன.
இருப்பினும், அவை கையளிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகின்ற நிலையில், இன்று வரை ஆளணி வெற்றிடம் நிரப்பப்படாது காணப்படுகின்றது. இது தொடர்பில், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மாவட்டத்துக்கான தீயணைப்புப் பிரிவுக்குரிய இயந்திரங்களும் கட்டடங்களும், தங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால், இதற்கான ஆளணி பற்றாக்குரை நிரப்பப்படவில்லை என்றும் பயிற்றுவிக்கப்பட்ட ஆளணியின்மையால், சிற்றூழியர்களை வைத்து குறித்த பிரிவை இயக்கவேண்டிய நிலை காணப்படுவதாகவும் கூறிய அவர், தீயணைப்புப் பிரிவுக்கு, 32 பேரை நியமிப்பது தொடர்பில், வடமாகாண பிரதம செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், .இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் கூறினார்.
இதனால், 32 பேரையும் நியமிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் இதனால், அவசரத் தேவைகளின் போது, தீயணைப்புப் பிரிவைச் செயற்படுத்துவதில் தடைகளும் தாதமங்களும் காணப்படுவதாகவும், அவர் மேலும் கூறினார்.
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago