2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கரைச்சியில் முதலாம் மொழியாக தமிழ் மொழி பிரகடனம்

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம், முதலாம் மொழியாக தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, கரைச்சிப் பிரதேச சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே, இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக, கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களின் வணிக நிறுவனங்களுடைய பெயர் பலகைகள் மற்றும் விளம்பரங்கள் அனைத்தையும் தமிழ் மொழி அமுலாக்கப்படுவது உறுதிசெய்யப்படவுள்ளது.

இதற்கு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள், பொது அமைப்புகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள்படுகின்றனர்.

2019ஆம் ஆண்டு, தங்களுடைய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய செயற்றிட்டங்களின் கீழ், தமிழ் மொழி அமுலாக்கமும் முதன்மை பெறுகிறதென, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆகவே, அவர்களுடைய பெயர் பலகைகளிலும் விளம்பரங்களிலும் முதலாம் மொழியாக தூய தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அது தொடர்பான தீர்மானமும் சபையில் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த நடைமுறையை, சரிவர அமுல்படுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்டவர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X