2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கரையொதுங்கிய ஆளில்லா படகு

Princiya Dixci   / 2022 மார்ச் 20 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

லேம்பர்ட்

தமிழ்நாடு - நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடித் துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று   இன்று (20) காலை கரையொதுங்கியுள்ளது.

மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக,  கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரிகள், OFRP-A-0851 KCH என்ற இலக்கம் உடைய குறித்த படகை கைப்பற்றியுள்ளனர்.

இப்படகு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த படகா  அல்லது கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் படகா, இதில் யாரும்  வந்தனரா  என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுங்கத்துறை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் பொலிஸார் மற்றும் கடலோரப் பாதுகாப்பு குழுவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .