2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கற்சிலைமடுவில் லொறி விபத்து

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடு பகுதியில், இன்று (16) காலை 9.15 மணிக்கு இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் 

 புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி எருமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த லொறி ஒன்று, கற்சிலைமடு பகுதியில் வைத்து, தனது வேகக் கட்டுப்பாட்டையிழந்து, அருகிலுள்ள காணிக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. 

இதன்​போது, லொறி சாரதியும் நடத்துநரும் காயங்களுக்குள்ளான நிலையில், ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .