2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கலைநிகழ்ச்சி

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறகுநுனிக்ரியேஷன்ஸ் ஏற்பாடுசெய்துள்ள 'நம்பிக்கையின் வாக்குமூலம்' கலைநிகழ்ச்சித் தொடரின் வடமாகாணத்துக்கான நிகழ்வு நாளை சனிக்கிழமை பி.ப 3.30 முதல் யாழ். பொதுநூலககேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் 'நேசிப்பு' என்ற தலைப்பில் அஷ்ரபா-கமலாவாசுகி ஆகியோரின் கவிதை-ஓவியக் கண்காட்சியும் என். ஆத்மா-வி. சதானந்தம் இணைந்து உருவாக்கியுள்ள 'புன்னகை'- இலங்கைப் பாடல்களின் இசையளிக்கையும் சுமதிசிவமோகன் யட்டியாந்தோட்டை கருணாகரன், அஃப்ராஆகியோர் வழங்கும் 'தேரும் தெருக்கதையும்'நாடகமும் இவற்றைத் தொடர்ந்து பார்வையாளர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.

போருக்குப் பிந்திய சூழலில் அதிகம் கவனிக்கப்படாததும் முக்கியத்துவம் உடையதுமான தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலான மனந்திறந்த கருத்துப்பகிர்வை முன்னிறுத்தியதாக இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இத்தொடரில் ஏற்கெனவே மட்டக்களப்பு, ஹற்றன் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் தமிழ் - முஸ்லிம் பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.​


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X