2025 மே 21, புதன்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

எழுக தமிழ் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்புகளுகளுடனான கலந்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. 

போர்க் குற்ற விசாரணையை நடத்து,அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து  போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில்  எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் முகமாக நாளைய தினம் காலை 9  மணியளவில் வவுனியா வாடிவீட்டில் பொது அமைப்புகளின் உடனான சந்திப்பை தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X