2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில் கிராமிய பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், நேற்று (18) நடைபெற்றது .

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத தொழில்கள், புதிய நபர்களின் நடமாட்டங்கள் கிராம அலுவலர் பதிவுகள் இன்றி தங்கியிருப்போர் பற்றிய விவரங்களை சேகரித்தல், சிறுவர் பாதுகாப்பு கல்வி சார்ந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

 கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ராஜ் வினோத் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நிர்வாக கிராம அலுவலர், 573ஆவது படைப்பிரிவின்  இராணுவ பொறுப்பதிகாரி, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அமைப்புகளின்  தலைவர், உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .