2025 மே 17, சனிக்கிழமை

கல்வி கண்காட்சி ஆரம்பித்து வைப்பு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150ஆவது ஆண்டு பூர்த்தி யூபிலி நிகழ்வின் ஓர் அங்கமான கல்வி கண்காட்சி, இன்று (11)  காலை,  பாடசாலையின்  அதிபர் அருட்சகோதரர் ரொஜினோல்ட் தலைமையில்  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 150 வருட பூர்தியை முன்னிட்டு, பாடசாலை சமூகம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக பல்வேறுபட்ட கலாசார மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், 150 ஆண்டு சாதனை பயணத்தின் ஓர் அங்கமாக, கல்வி கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சி, நாளை வியாழக்கிழமை மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட இலங்கை வங்கி முகாமையாளர் மைக்கல் ஜோசப் மரியநாயகம், மன்னார் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், மன்னார் வலய கல்விப் பணிப்பாளர்  பிறட்லி,   மன்னார் டிலாசால் சபை இயக்குநர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .