2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’கல்விக்கு வறுமை தடை இல்லை என்பதை A/L பரீட்சைப் பெறுபேறுகள் சான்றாகின்றன’

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கல்விக்கு, ஒருபோதும் வறுமை தடை இல்லை என்பதை, அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சான்றாக வௌிப்படுத்தியுள்ளனவென, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில், இன்று (01) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், எதிர்காலத்தில், கல்வியில் முன்னேற்றம் அடைந்தவர்களாகத் தாங்கள் வளர்வதன் மூலம், தமது சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் கூறினார்.

தமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் உணவுப் பழக்க வழக்கங்களையும் இன்றைய சமூகம் கைவிட்டுள்ளதால், பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றனவெனவும், சிறிதரன் எம்.பி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .