2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கள்ள நோட்டு அச்சிட்டவருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2023 மார்ச் 11 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பில் 35 இலட்சம் கள்ள நோட்டு அச்சிட்டவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த 42 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர் இரண்டாவது தடவையாக கள்ளநோட்டு சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் கடந்த  08.09.2022 அன்று திருகோணமலை குச்சவெளிப்பகுதியில் கள்ளநோட்டுடன்   கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 09.03.2023 அன்று கள்ளநோட்டுக்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் கள்ளநோட்டு அச்சிடம் இயந்திரம் ஒன்றும் அச்சிடப்பட்ட 5,000 ரூபா தாள்கள் 700 உம் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து குறித்த சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .