2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கள்ளப்பாடு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு அஞ்சலி

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு – கள்ளப்பாடு, அ.த.க பாடசாலையில் கல்விகற்கும்போது ஆழிப்பேரலையால் உயிரிழந்த மாணவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆழிப்பேரலையினால், கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்ற 68 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்றையநாள் ஆழிப்பேரலையினால் உயிர் நீத்தவர்களுக்கான 15ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் பல இடங்களிலும் இடம்பெற்றுவரும் நிலையில், கள்ளப்பாடுஅ.த.க பாடசாலையில் கல்விகற்று உயிர்நீத்த மாணவர்களுடைய அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் உப அதிபர் திருமதி அகிலா விஜயரத்தினத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், ஆழிப்பேரலையில் உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக, பாடசாலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி, தீபங்களேற்றி மாணவர்களின் பெற்றோர்களாலும், உறவினர்களாலும், பாடசாலை ஆசிரியர்களாலும் கண்ணீரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரி இ.ஸ்ரீபுஸ்பநாதன் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .