2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கழுதைகளின் நடமாட்டத்தால் பாதசாரிகள் அசௌகரியம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 09 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கழுதைகள் வேகமாக ஓடித்திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகமான கழுதைகள் காணப்படுகின்றன. குறித்த கழுதைகள், மன்னார் நகர் பகுதியில் ஒன்றோடு ஒன்று சண்டை பிடிப்பதோடு அதி வேகமாக ஓடுகின்றன.

இதனால் கழுதைகளின் தாக்குதல்களுக்கு பாதசாரிகள் உள்ளாகுவதோடு, விபத்துக்களும் ஏற்படுகின்றன.

மன்னாரிலுள்ள கழுதைகளை பராமரிப்பது தொடர்பாக மன்னாரில் உள்ள தனியார் நிறுவனமொன்று வெளிநாட்டுப் பணத்தைப் பெற்று நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்ற போதும் உரிய முறையில் கழுதைகள் பராமரிக்கப்படுவதில்லை என மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர். 

தற்போது மன்னார் பகுதியில் நூற்றுக்கணக்கான கழுதைகள் காணப்படுகின்றன.

எனவே, குறித்த கழுதைகளை பராமறிக்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் குறிப்பாக கதைகளின் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்க அதிகாரிகளும் மன்னார் நகர சபையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X