2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கழிவகற்றும் வேலைத்திட்டம்

George   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜெ.தர்சினி  

தேசிய ரீதியில், பொலித்தீன் பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், நேற்று ஆரம்பித்துவைத்தார்.  

முல்லைத்தீவு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையில் பொறுப்பதிகாரி ப.தவகிருபா தலைமையில், முல்லைத்தீவு பொதுமைதானத்தில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றதுடன், எதிர்வரும் 30ஆம் திகதிவரை பொலீத்தின், பிளாஸ்டிக், இலத்திரனியல் கழிவுகளை அகற்றும் பணிகள், மாவட்டம் முழுவதும்  
முன்​னெடுக்கப்படவுள்ளன.  

இந்நிகழ்வில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துக்கொணடனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .