Editorial / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்
எங்கள் இருவருக்கு இடையிலும் ஒவ்வொருநாளும் குடும்ப பிரச்சினை ஏற்படும். சம்பவம் தினத்தன்று இருவரும் தாக்கிக்கொண்டோம். நான், மனைவியின் கழுத்தில் தாக்கினேன், அவள் நிலத்தில் விழுந்தாள், நீண்ட நேரம் எழும்பவில்லை தொட்டுப்பார்த்தேன் இறந்துவிட்டாள். என்னசெய்வதென்று தெரியாமல், வீட்டுக்கு பின்புறமாக மலசலகூடத்துக்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டுள்ளதாக கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 முல்லைத்தீவு - நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அப்பெண்ணின் கணவன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 23 வயதான பெண்ணும், முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதான ஆணும் திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இளம் குடும்ப பெண் தனது தாயாரிடம் தொலைபேசியில் நாளாந்தம் உரையாடுவதாகவும் ஒக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்துள்ளது,
இந்நிலையில், மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு அப்பெண்ணின் தாயார் திங்கட்கிழமை (23) சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இருக்கவில்லை. வீட்டின் பின்புறம் பார்த்தபோது புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண்ணின் தாய், முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே சடலம் கைப்பற்றப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட கணவன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (25) முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
38 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
1 hours ago