2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காசோலைகள் வழங்கல்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சனசமூக நிலையங்களின் அபிவிருத்திக்காக பத்தாயிரம் ரூபாய் காசோலைகளும் தூய்மையாக்கல் உபகரணங்களும்  நேற்று (19) பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.

பச்சிலைப்பளி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள 22 சனசமூக நிலையங்களின் அபிவிருத்திக்காக, தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனின் ஆலோசனைக்கமைவாக, பிரதேச சபையின் உப தவிசாளர் கஜனால், இந்த காசோலைகளும் தூய்மையாக்கல் உபகரணங்களும்  சனசமூக நிலைய நிர்வாகத்தினர்களிடம் கையளிக்கப்பட்டன .

இந்த நிகழ்வில், சபையின் செயலாளர், சனசமூக நிலையப் பிரதிநிதிகள், சபையினுடைய விடயம் சார்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .