2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காடுகளை அழித்து கிறவல் அகழ்வு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில், சுமார் 1,000 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு, கிறவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள கொக்காவில், புத்துவெட்டுவான் ஆகிய பகுதிகளில், 1,000 ஏக்கர் வரையான பெரும் காடுகள் அழிக்கப்பட்டு, கிறவல் அகழ்வுகள் தொடச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கிறவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது மட்டுமல்லாது, இந்தப் பிரதேசத்தினுடைய பிரதான வீதியும் மிக மோசமாக சேதடைந்து வருகின்றது.

குறித்த பகுதியில் கிறவல் மண் அகழ்வதற்கு, வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதிகளை வழங்கியுள்ளதால், இந்தப் பிரதேசங்களின் வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறையற்று, பாரிய மரங்களையும் காடுகளையும் அழித்து கிறவல் அகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனமெடுத்து கிறவல் அகழ்வு செய்யப்பட்ட இடங்களில் மீள்வனமாக்கல் செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .