2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காடுகளைக் கையளிக்க முன் அனுமதி பெறவேண்டும்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

அடுத்தாண்டில் இருந்து, மரக்கூட்டுத் தாபனத்துக்கு வனவளத் திணைக்களம், காடுகளைக் கையளிக்கும் போது, மாவட்ட அபிவிருத்திக் குழுவில் அனுமதிபெற்றப் பின்னரே, மரக்கூட்டுத்தாபனத்துக்கு காடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தி​ல் வலியுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று (16) நடைபெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் நாட்டப்பட்டுள்ள தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு, தெற்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் விளக்கம் கொடுக்க வேண்டுமெனவும், தெரிவிக்கப்பட்டது.

இதன்போது அதற்குப் பதிலளித்த வனவளத் திணைக்களத்தினர், 2019ஆம் ஆண்டு, அம்பகாமம், மதவாளசிங்கன் குளம் ஆகிய பகுதிகளில் 74 ஹெக்டெயர் பரப்பில் உள்ள தேக்கு மரங்களை அறுப்பதற்கு, இலங்கை மரக்கூட்டுத்தாபனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாதகவும் அவ்வாறு வெட்டப்படும் மரங்கள் இடத்தில், மரக்கன்றுகள் நாட்டிவைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்தே, அடுத்தாண்டில் இருந்து, மரக்கூட்டுத் தாபனத்துக்கு காடுகளைக் கையளிக்கும் போது, மாவட்ட அபிவிருத்திக் குழுவில் அனுமதிபெற்றப் பின்னரே, மரக்கூட்டுத்தாபனத்துக்கு காடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .