Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - புத்துவெட்டுவான் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையை காட்டுயானைகள் தொடர்ந்து அழித்து வருவதாகவும் இதனால் தாங்கள் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட புத்துவெட்டுவான் மருதங்குளத்தின் கீழ் இம்முறை 70 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை (19) இரவு புகுந்த காட்டுயானைகள் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த பெருமளவான நெற்பயிர்களை அழித்துள்ளன.
குறித்த பகுதியில், சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பகல் வேளைகளில் கால்நடைகள், காட்டுவிலங்களின் அழிவுகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு காவல் இருந்து வருகின்றனர்.
இதேவேளை இரவு வேளைகளில் யானை தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இரவு விழித்திருந்து தமது பயிர்களை காத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு புகுந்த யானைகள் பெருமளவான வயல்களை அழித்துள்ளன.
இரவு நெற்காணிகளுக்குள் புகுந்த யானைகளை துரத்த முற்பட்ட போதும், யானைகள் விவசாயிகளை துரத்தியதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாள்களாக அதிகரித்துள்ள இந்த யானைத் தொல்லையால் பெருமளவான பயிர்ச்செய்கைகள் அழிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு யானைகளால் அழிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பித்தாலும் அதற்கான பயிரழிவுகளை மதிப்பீடு செய்வதற்கு நீண்டகாலம் எடுப்பதனாலும் இந்த அழிவுகளைப் பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago