2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காட்டுயானைத் தொல்லைக்கு தீர்வு தருக

Gavitha   / 2021 மார்ச் 07 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வன்னியில் காட்டுயானைத் தொல்லைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகள் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது குரங்குகளின் தொல்லையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்களது பயிர்நிலங்களை, யானைகள் நாசமாக்கி வருவதாகவும் இதனால், கடந்த காலங்களில் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, உரிய திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் யானை வேலிகள் அமைக்கப்பட்டும் அதைத் தாண்டி, யானைகள் பயிர்நிலங்களுக்குள் வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .