Niroshini / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமடு கிராமத்துக்குச் சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வேறு கிராமத்தவர் அனுமதிப்பத்திரங்கள் இன்றி, அடாத்தாக அபகரிக்க முற்பட்டு புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு, அக்கிராம மக்கள் கொண்டு சென்றனர்.
இதையடுத்து, அப்பகுதிக்கு நேற்று (16) விஜயம் மேற்காண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், நிலைமையை அவதானித்ததுடன், இந்த விடயம் தொடர்பாக முசலி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்.
முசலி பிரதேச காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தரும் அந்த் இடத்துக்கு வருகை தந்து, இக்காணி அரச காணியாக எல்லைப்படுத்தப்பட்ட காணி என்பதை உறுதி செய்தனர்.
அத்துடன், இந்தக் காணி அடாத்தாகப் பிடிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கு அரச அதிகாரிகள் தெரியப்படுத்தினர்.
இதையடுத்து, இந்தக் காணி அபகரிக்கும் முயற்சி உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு, மருதமடு கிராமத்தில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக இந்தக் காணிகளை பிரித்து வழங்குமாறு, முசலி பிரதேச செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago