Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், காணி விடுவிப்பு விடயங்களில் படையினர் நேரடியாகத் தலையிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளனவெனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, இது, சட்ட ஒழுங்கைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் கூறினார்.
புதுக்குடியிருப்பு பகுதியில், நேற்று (11) நடைபெற்ற மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், முறுகண்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் காணி விடுவிப்பிற்காக, அண்மையில், கோவிலுக்கு நேரடியாகச் சென்று, கோவில் பூசகர் சார்ந்தவரை படையினர் விசாரித்துள்ளனரென அறியக்கிடைத்துள்ளதாகவும் இது சட்டம் ஒழுங்குகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீடுகள் வழங்காத மக்களுக்கு வீடுகள் வழங்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .