Editorial / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முள்ளிக்குளத்தில், விடுவிக்கப்பட்ட காணிகளுக்குச் செல்லும் பிரதான வீதிகளை, கடற்படையினர் மீண்டும் இன்று (31) காலை முட்கம்பிகளால் மூடியுள்ளதாக, முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.
கடற்படையினரின் இந்தச் செயற்பாட்டால், முள்ளிக்களம் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்துக்கு, கடற்படை முகாம் ஊடாகச் செல்லும் பிரதான வீதியை, கடந்த 21ஆம் திகதியன்று, கடற்படையினர், எவ்வித அறிவித்தலும் இல்லாமல், திடீரென முட்கம்பிகள் கொண்ட வேலியால் இடைமறித்து அடைத்தனர்.
இதையடுத்து, கடற்படையினரின் இச்செயற்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, குறித்த வீதியை, கடற்படையினர் மீண்டும் திறந்தனர்.
இந்த நிலையிலேயே, மீண்டும் எவ்வித அறிவித்தல்களுமின்றி, குறித்த வீதியை இன்றுக் காலை கடற்படையினர் முட்கம்பிகளால் மூடியுள்ளனர்.
கடற்படையினரின் குறித்த செயற்பாட்டைக் கண்டித்து, முள்ளிக்குளம் கிராம மக்கள், மாணவர்கள் இணைந்து, முள்ளிக்குளத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026