2025 மே 19, திங்கட்கிழமை

‘காணிகளை துஷ்பிரயோகம் செய்தால் நடவடிக்கை ’

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

பொதுமக்களின் காணிகளைத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீதும் அவர்களை வளர்த்துவிடும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், இனி நடவடிக்கை எடுக்கப்படுமென, மக்கள் திட்ட ஒன்றியம், காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் முக்கியஸ்தர் ந.தேவகிருஸ்ணன் தெரிவித்தார்.

வவுனியாவில், நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், செட்டிகுளம், வவுனியா வடக்கு, நானாட்டான், மாந்தை மேற்கு, ஒட்டுசுட்டான், கிளிநொச்சி, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் இருந்தே, காணி தொடர்பில் அதிக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள், அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து அதிகாரத்தை வழங்கும் நிலையில், காணி துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஏன் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லையெனவும், அவர் வினவினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X