Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி, கேப்பாப்புலவில், இன்று (26) கையெழுத்து போராட்டமும் கவனயீர்ப்பு வாகனப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்க கோரி, 727ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து, இந்தக் கையெழுத்து போராட்டத்தையும் கவனயீர்ப்பு வாகனப் பேரணியையும் முன்னெடுத்தது.
இதன்போது, கேப்பாப்புலவு வீதியில் இருந்து ஆரம்பமான இந்தக் கவனயீர்ப்பு வாகனப் பேரணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றது.
பின்னர் அங்கு, ஜனாதிபதிக்கு கையளிக்கும் முகமாக, மாவட்ட உதவி செயலாளர் ஆ.லதுமீரா மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த வாகன கவனயீர்ப்புப் பேரணியும் கையெழுத்து போராட்டமும், முல்லைத்தீவில் இருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி சென்றடைந்து, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
பின்னர், பூநகரி ஊடாக மன்னாரைச் சென்றடைந்து, அங்கிருந்து வவுனியா, நீர்கொழும்பு ஊடாக, மார்ச் 2ஆம் திகதியன்று கொழும்பைச் சென்றடையும்.
அன்றைய தினம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கேப்பாப்புலவு மக்களால், மாபெரும் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago