2025 ஜூலை 16, புதன்கிழமை

‘காணிகள் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன’

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி நகரத்தை அண்டிய பகுதிகளில், இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல, மாகாண காணி ஆணையாளர்களின் அனுமதிகள் இன்றி முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளதாக, மாகாண காணி ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில்  பெறுமதி வாய்ந்த பல அரச காணிகள், அதிகாரிகளின் உதவியுடன் அபகரிக்கப்பட்டுள்ளபோதும், நகரில் வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், காணிகள் இன்றி வாழந்து வருகின்றன.

இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகள், கிளநொச்சி குளத்தை அண்டிய காணிகள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணிகளை, காணிகளற்ற, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய குடும்பங்கள் எவையும் அபகரித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கான காணித்துண்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக, குறித்த காணிகளை மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளிலும் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளும் முதலாளி வர்த்தகத்தினருமே அடாத்தாக பிடித்து ஆக்கிரமித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .