Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
ஒட்டுசுட்டான் பிரதேச காணிப் பயன்பாட்டு குழு கூட்டம், நேற்று (14) பிற்பகல் 2 மணியளவில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரின் தலைமையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், ஒட்டுசுட்டான் பிரதேச உதவி செயலாளர் இ.ரமேஷ், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் அ.தவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாங்குளம் பகுதியில் நகர அபிவிருத்தி திட்டத்துக்குள் அதிகமாக வெளிமாவட்ட நபர்கள் காணி கோரிக்கை விடுத்தமை தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் எதிர்ப்பை தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், பிரதேச செயலகத்துக்கு விண்ணப்பங்கள் தரப்படும் போது, அதனை தாங்கள் நிராகரிக்க முடியாது எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதேச செயலாளர், அதன் அடிப்படையிலேயே இந்தக் கூட்டத்தில் தீர்மானிப்பதற்காக, நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
அது தொடர்பில் நீங்கள் ஆராய்ந்து எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அதனை செயற்படுத்த முடியுமென்றும், அவர் தெரிவித்தார்.
இதன்போது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எமது கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு காணியில்லாது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எனவே, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்க வேண்டும். முதலில் மாங்குளம் பிரதேசங்களைச் சார்ந்தவர்களுக்கும் அதனை தொடர்ந்து அருகில் உள்ள பிரதேசங்களில் அல்லது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டவர்களுக்கு காணிகளை வழங்க முடியும் எனவும் அதனை தொடர்ந்து வெளியிடத்தவர்களுக்கு வழங்க முடியும் எனவும் நேரடியாக வெளிமாவட்டங்களுக்கு முன்னுரிமைப்படுத்தி வழங்காமல், எமது பிரதேசத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகளவான காணியை கோரியுள்ளவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்தி ஒரு குழு ஒன்றை அமைத்து அது தொடர்பில் ஆராய்ந்து குறித்த காணிகளை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
அத்துடன், அதற்கு முன்னதாக குறித்த மாங்குளம் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை வழங்குவதாக இருப்பின் புதிய திட்ட முன்மொழிவுகள் உடன் விண்ணப்பங்களை வழங்குமாறு தெரியப்படுத்துமாறு தெரியப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த மாங்குளம் பகுதி கிராம அலுவலர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
குறித்த குழு தீர்மானங்களை மேற்கொண்டு, அடுத்து வரும் காணி பயன்பாட்டு குழு கூட்டத்துக்கு தெரியபடுத்துமாறும் அதனடிப்படையில் தீர்மானிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
14 minute ago