க. அகரன் / 2019 ஜனவரி 16 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணிப் பிணக்குகள் தொடர்பில் 370 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இரட்ணசிங்கம் நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்ட காணிப் பிணக்குகளுக்கு விரைவாகவும், சுமூகமாகவும் தீர்வு காணும் முகமாக நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் பிணக்குகளுக்கு தீர்வு காணுமாறு இதுவரை 370 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அம்முறைப்பாடுகள் தொடர்பாக விரைவில் இரு தரப்புக்களையும் அழைத்து கலந்துரையாடப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் காணிப் பிணக்குகள் தொடர்பான விபரங்கள் இருப்பின் எம்மிடம் சமர்ப்பிக்க முடியும். பெற்றுக் கொள்ளப்படும் பிணக்குகள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், காணிப் பிணக்குகளை நேரடியாக அல்லது தபாலில் இ.நவரட்ணம், தவிசாளர், விசேட காணி மத்தியஸ்தர் சபை, இல 384/1, மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியா என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago