Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக, 370 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இரட்ணசிங்கம் நவரட்ணம், இன்று (15) தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக, விரைவில் இரு தரப்புகளையும் அழைத்து, கலந்துரையாடப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், காணிப் பிணக்குகள் தொடர்பான விவரங்கள் இருப்பின், அது தொடர்பில் தம்மிடம் சமர்ப்பிக்க முடியுமெனத் தெரிவித்த அவர், பெற்றுக் கொள்ளப்படும் பிணக்குகள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், காணிப் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவே, தெரிவிக்க முடியுமென, அவர் மேலும் கூறினார்.
33 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
01 May 2026