Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர், தனது காணியை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளார் என்றுத் தெரிவித்து, காணியின் உரிமையாளரால் செவ்வாய்க்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம், பொலிஸாரின் வாக்குறுதியையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி-பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை, தென் பகுதியில் இருந்து வந்த ஒருவரும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஒருவரும், அத்துமீறி ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில், காணியின் உரிமையாளர், பிரதேச செயலாளர், கிராம அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளார்.
எனினும், சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் வெளியேற மறுத்து, அத்துமீறிக் குடியிருந்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணியின் உரிமையாளரான பெண்ணொருவர், காணி அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சிப் பொலிஸார், காணி உரிமையாளருடன் கலந்துரையாடியதுடன், இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
மேலும் காணி உரிமையாளரை அவரது காணிக்குள் குடியிருக்குமாறும் காணியில் அத்துமீறிக் குடியிருப்பவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி குடியிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .