Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2019 ஜனவரி 31 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
காப்புறுதிச் சபை ஊழியர் விவசாயி ஒருவரைத் தாக்கியதில் விவசாயி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (30) முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை மதிப்பீட்டு செய்யும் நடவடிக்கைகளில் கமத்தொழில் காப்புறுதி சபையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் நேற்று (30) தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள வயல் நிலங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிக்கும், காப்புறுதிச் சபை ஊழியருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையடுத்து காப்புறுதிச் சபை ஊழியர் விவசாயியைத் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளார். இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான விவசாயி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான விவசாயி கருத்துத் தெரிவிக்கையில்,
கமத் தொழில் காப்புறுதிச் சபையால் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட குழுவினரில் எந்தவொரு தமிழ் அதிகாரிகளும் வருகை தரவில்லை.
வருகைதந்தவர்கள் அனைவரும் சிங்கள அதிகாரிகள் என்பதுடன், அவர்களுக்கு நாம் கூறும் விடயம் எதுவும் விளங்கவில்லை.
“எனக்கு 12.30 மணியளவில் தொலைபேசி அழைப்பெடுத்து, காணியைப் பார்வையிட வேண்டும், கையொப்பமிட வேண்டும் என்று கூறி என்னை அழைத்தார்கள்.
காப்புறுதிக்குரிய படிவம் நிரப்புவதற்காக கூப்பிட்டு, அவரிடம், இவரிடம் சந்தியுங்கள் என்று கூறி அலைக்கழித்து, தனிவயல் வெளியில் இருந்த ஒருவரை சந்திக்க வைத்தனர்.
அவரைச் சந்தித்த போது, உன்னுடைய வயல் தூரமாக உள்ளது வந்து பார்க்கமுடியாது என்றும் கூறினார்.
அதற்கு வந்து வயலைப் பார்க்க முடியுமெனில் பாருங்கள், நான் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே இப்போது வந்து சேர்ந்தேன், எனக்கு நூறு சதவீதமும் வயல் இழப்பு என்று கூறினேன்.
அதற்கு அவர் சிங்களத்தில் என்னை ஏசியதுடன், உனக்கு எதுவித கொடுப்பனவும் தரமுடியாது என்றும் கூறினார்.
ஏன் தரமுடியாது என்று கேட்டதற்கு, அதற்கு எனக்கு அவர் நெஞ்சில் அடித்து கீழே தள்ளிவிட்டார்.
அவரின் தாக்குதலால் எனக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டது. ஆனாலும் இதை நான் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாது, மீண்டும் சாமாளித்துக்கொண்டு அவர் வரும்போது ஓரமாக நின்றிருந்தேன்.
அப்போது அவர் என்னை அங்கிருந்து செல்லுமாறு ஏசினார், நான் அங்கிருந்து செல்ல முற்பட்டவேளை என்னைத் துரத்தித் துரத்தித் தாக்கினார்” என்றார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025