Niroshini / 2021 ஜூலை 06 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா - தோணிக்கல் பகுதியில், இன்று (06) காலை, 15 வயது சிறுவனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விபுலானந்த கல்லூரியில் தரம் 10இல் கல்வி பயின்ற, தோணிக்கல் - லக்ஷபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (05) இரவு வழமைபோல வீட்டில் உறங்கிய சிறுவனை, இன்றுக் காலை எழுப்புவதற்காக, சிறுவனின் அறைக்கு பெற்றோர் சென்ற போது, அவரைக் காணவில்லை.
இதையடுத்து, குறித்த சிறுவனை காணாது, பெற்றோர் தேடிய நிலையில், வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து, சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதன்போது, சிறுவனின் முகப்பகுதியில் காயங்களும் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago