Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரச வைத்தியசாலைகளிலோ அல்லது தகுதிவாய்ந்த வைத்திய அதிகாரி ஒருவரிடமோ மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென, பொதுமக்களிடம் மன்னார் பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில், டெங்கு அபாயம் தொடர்பில், மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மன்னார் பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் பணிமனையால், இன்று (28) வௌியிடப்பட்ட விழிர்ப்புணர்வுத் துண்டுப்பிரசுரத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் துண்டுப்பிரசுரத்தில், உங்களுடைய கிராமங்களில், டெங்கு காய்ச்சல், மீண்டும் தீவிரமாகப் பரவி வருவதாகவும் டெங்கு நுளம்பு பெருகும் வகையிலான சூழல் பல அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகற்ற முடியாத வகையில் காணப்படும் நீர் தேங்கும் பகுதிகளில், கப்பீஸ் போன்ற மீன்களை வளர்ப்பதன் மூலம் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த முடியுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
காலையிலும் மாலையிலும் 5 மணி முதல் 8 மணி வரையுமான காலப் பகுதியில், நுளம்பு கடித்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்களுமாறும் காய்ச்சல் காலங்களில், வலி நிவாரண மாத்திரைகள், அஸ்பிரின் போன்ற மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாமெனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago