2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’காரியாலயத்தில் போதியவு வளங்கள் இல்லை’

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கொக்கிளாய் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்தில் போதியளவு வளங்கள் இல்லை என, முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், குறித்த காரியாலயத்திலுள்ள தண்ணீர்ப் பம்பி திருடப்பட்ட காரணத்தால் அங்கிருந்த உத்தியோகத்தர், அக்காரியாலயத்தில் தரித்து நிற்காமல் முல்லைத்தீவு தலைமைக் காரியாலயத்தில் தரித்து நின்று கொக்கிளாயிலுள்ள அலுவலகத்திற்கு சென்று வருகின்றாரென்றார்.

“குறித்த காரியாலயம் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மக்கள் சந்திப்புக்காக திறக்கப்படுகின்றது. அங்குள்ள மக்கள் அவர்களது தேவைகளை கொக்கிளாய் காரியாலயத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பூர்த்திசெய்துகொள்ள முடியும்.

“அதுதவிர, கொக்கிளாய் கடற்றொழில் பரிசோதகர், கொக்கிளாய் கடற்றொழில் காரியாலயத்திலிருந்து வெளிக்கள வேலைகளை செய்து வருகின்றார்.

“மேலும் குறித்த காரியாலயத்தினுடைய வசதிகள் பூர்த்தி செய்யப்பட்ட பிற்பாடு அக்காரியாலயத்தில் உரிய உத்தியோகத்தர் தரித்து நின்று பணிபுரிவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .