2025 மே 21, புதன்கிழமை

காரில் கேரளா கஞ்சா கடத்தல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவில், கேரளா கஞ்சா கடத்திய காரொன்றை, நேற்றுக் காலை சிறப்பு அதிரடிப்படையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

முல்லைத்தீவு - கொக்குளாய் வீதியில் உடுப்புக்குளம் பகுதியில், சோதனை நடவடிக்கையில் நின்ற சிறப்பு அதிரடிப்படையினரை கண்ட கார் ஒன்று, வீதி ஓராமாக காரை நிறுத்திவிட்டு அதன் சாரதி தப்பி ஓடியுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் குறித்த ஈ.பி. கே.எச். 0011 என்ற இலக்கமுடைய காரை சோதனைசெய்த போது, காரில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, காரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்று சோதனை செய்தபோது, காரில் 1.4 கிலோகிராம் கேரளா கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த காரில் இருந்த இரண்டு அலைபேசிகள்,காரின் காப்புறுதி புத்தகங்கள் அனைத்தும் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு, முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X