2025 மே 05, திங்கட்கிழமை

கால்நடை மேய்ச்சல் பிரச்சினைக்குத் தீர்வு

Niroshini   / 2021 மே 31 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளுக்கு கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

முழங்காவில் பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், பயணக் கட்டுப்பாடு காரணமாக, தமது கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக அமைச்சருக்குத் தெரியப்படுத்தினர்.

 

இதையடுத்து,  கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர மற்றும் முழங்காவில் பொலிஸ் பொறுப்பதிகாரி ருக்மால் ரத்னாயக ஆகியோரின் கவனத்துக்கு, அமைச்சரால் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டது.   

பயணக் கட்டுப்பாடு காலத்தில், விவசாய நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ளலாம் என்ற  ஜனாதிபதியின் உத்தரவை இதன்போது அமைச்சர் நினைவூட்டினார்.

இதையடுத்து, ஆடு அல்லது மாடு மேய்ப்போர் தனியாக மந்தைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல அனுமதிப்பதாக பொலிஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X