2025 மே 08, வியாழக்கிழமை

’கால்நடைகளுக்குரிய தீவனத்தை விநியோகிக்கவும்’

Niroshini   / 2021 ஜூன் 08 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்

வீட்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குரிய தீவன விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்டச் செயலாளர்களிடம்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

இது தொடர்பில், அஅவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'வீட்டில் கால்நடைகளை வளர்த்து வரும் கால்நடை பண்ணையாளர்கள் குறிப்பாக நல்ல இன பசுமாடுகள் வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டு அதனூடாக பெறப்படுகின்ற வருமானத்தையே நம்பி தங்களது நாளாந்த வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

'இந்த பயணக் கட்டுப்பாடு மூலமாக இந்த கால்நடைகளுக்குரிய குறிப்பாக மாடுகளுக்குரிய தீவனத்தைப் பெற முடியாமையால் சிரமப்படுகிறார்கள்.  பலவிதமான கஷ்டங்களையும் எதிர்நோக்குகிறார்கள்.

'தீவனக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதனால் இவர்களுடைய கால்நடைகளுக்குரிய குறிப்பாக மாடுகளுக்குரிய தீவனத்தினை பெறமுடியாதுள்ளது. இதனால் கால்நடை உயிரினங்களுக்கு உரிய உணவினை வழங்க முடியாதுள்ளது.

'ஆகவே தீவன விற்பனையாளர்கள் இதனை பயனாளிகளுக்கு கிடைக்கக் கூடிய வகையில் விநிநோகம் செய்ய ஏற்பாடு செய்யலாம். அல்லது மக்கள் அத்தியாவசிய தேவைப்பொருள்களை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டது போன்று தீவன நிலையங்களையும் திறந்து, பொருள்களை விற்பனை செய்ய உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் சாலச்சிறந்ததாக அமையும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுக்கு இந்தக் கடிதத்தை  செல்வம் எம்.பி  அனுப்பி வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X