2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காவலரண்களை அமைக்கத் தீர்மானம்

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார் 

முல்லைத்தீவு மாவட்டத்தில், மணல் அகழ்வு நடைபெறுகின்ற இடங்களில், பொலிஸ் காவலரண்களை அமைப்பதெனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பிரதேச செயலகங்களும் மாவட்டச் செயலகமும் வழங்குகின்ற தகவலின் அடிப்படையில், மணல் அகழ்வு நடைபெறுகின்ற பகுதிகளில், பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு, மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.  

மேலும், மணல் அகழ்வைத் தடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று, இராணுவத்தினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .