2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிணறுகள் வற்றியமையால் சிரமம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் கிணறுகள் வற்றியுள்ள நிலையில், கிராம மக்கள் நீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிராமத்தில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் 298 வரையான குடும்பங்கள் கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்திலுள்ள குடும்பங்களின் நீர்த் தேவைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 11 பொதுக் கிணறுகளும் நீர் வற்றிக் காணப்படுகின்றன.

இதனால் இங்கு வாழும் 298 வரையான குடும்பங்களும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .