2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - நெலுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில், இன்று (20) அதிகாலை, வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 2 பிள்ளைகளின் தாயான கௌரி (வயது 32) என அடையாளங்காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை, கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் திடீரென காணாமல் போனதையடுத்து, அயலவர்கள், அந்தப் பெண்ணைத் தேடிய போது, வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்பட்ட கிணற்றில் அவர் சடலமாக மிதந்ததை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில், நெலுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குற்றத்தடவியல் பொலிஸாரின் உதவியுடன், கிணற்றுக்குச் செல்லும் பாதையில் இருந்து கத்தியொன்றை மீட்டெடுத்துள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .