2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிணற்றில் வீழ்ந்த யானைக்குட்டி மீட்பு

Editorial   / 2019 மே 31 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - கனகராஜன்குளம், பெரியகுளம் பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த 6மாதமான யானைக்குட்டி ஒன்று இன்று பிற்பகல் 3மணி வரையான 7 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு காட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

கனகராஜன்குளம், பெரியகுளம் ஆயுர்வேத வைத்தியசாலை அமையும் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிற்குள் யானைகுட்டி ஒன்று நேற்று இரவு தவறி வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் யானைக்குட்டியை மீட்கும் போராட்டத்தில் கனகராஜன்குளம் பொலிஸார், வவுனியா மற்றும் கிளிநொச்சி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கிணறு அகழப்பட்டு கிணற்றிலிருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டு, மிருக வைத்திய அதிகாரியின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பிற்பகல் 3.30மணியளவில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .