2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிபீர்க் குண்டு செயலிழப்பு

எஸ்.என். நிபோஜன்   / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொஷாந்

பளையில், நேற்று (07) பிற்பகல் 2 மணியளவில் பாரிய கிபீர்க் குண்டொன்று மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.  

வேம்பொடு கேணிப் பகுதியில், புதையுண்டிருந்த நிலையிலேயே இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இக்குண்டு மீட்டுக்கப்பட்டள்ளதாகவும், அது பாரிய சத்தத்துடன், பெரும் சேதங்களை ஏற்படுத்தக்கூடியது என்றும் அறியமுடிகிறது. இதனையடுத்து,  இந்திராபுரம், வேம்பொடுகேணி, இத்தாவில், செல்வபுரம், கச்சார்வெளி, போன்ற கிராம மக்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். 

குண்டு புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களே, இவ்வாறு வெளியேற்றப்பட்டு, குண்டு, நேற்று மாலை 4 மணியளவில் செயலிழக்கச் செய்யப்பட்டது.

அதனையடுத்தே, கிராம மக்கள் மீண்டும் தங்களுடைய கிராமங்களுக்குச் செல்வதற்கு, படையினர், அனுமதித்துள்ளனர். இந்தக் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்ட போது, பாரிய அதிர்வை  உணர்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .