2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘கிரவலைப் பெறுவதில் சிக்கல்’

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், கம்பெரலியத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளைப் புனரமைப்பதற்கு, கிரவல் மண்ணைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக, மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கம்பெரலியத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளைப் புனரமைப்பதற்குரிய கிரவல் மண்ணைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தே இங்குள்ள வீதிகளைப் புனரமைப்பதற்கு கிரவல் மண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், கிரவல் மண்ணுக்கான தட்டுப்பாடு நிலவுவதால், எதிர்காலத்தில் அங்கிருந்தும் கிரவல் மண்ணைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுமென, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .