2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிராம அலுவலகர் மீது தாக்குதல்: அலுவலகர்களுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலகர் மீது, பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மந்துவிலில் கிராம அலுவலகராக பணியாற்றும் பு.கஜகோகுலன் என்பவர் மீதே. இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கிராம அலுவலர், மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்காக சென்று பார்வையிட்டுவிட்டு திருப்பிய போதே, பிரச்சினைக்குரிய காணி உரிமையாளர்கள், கிராம அலுவலகரை வ​ழி மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சிவநகர் கிராமத்தில் பணியாற்றும் கிராம அலுவலகர்கள், தொடர்சியாக குற்றமிழைக்கப்பட்ட சிலரால் அரசியல் பின்னணியில் அச்சுறுத்தப்பட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கலாசார சீர்கேடுகளைத் தட்டிக்கேட்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், கிராம சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .