2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’கிராம சக்தித் திட்டம் நல்ல திட்டமாகும்’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு, கிராம சக்தித் திட்டம் நல்ல திட்டமாகுமென, கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பி.அமலராஜ் தெரிவித்தார். 

அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் நேற்று முன்தினம் (11) கிராம சக்தித் திட்டத் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கிராம சக்தித் திட்டத்தின் மூலம் கிராமங்களை அபிவிருத்தி செய்யமுடியும்.  மக்களிடையே குழுக்களாக இணைந்து சுழற்சி முறை கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

“வறுமை நிலையில் வாழ்கின்ற குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கிராம சக்தி போன்ற திட்டங்கள் முக்கியமானதாகும். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 42 கிராம அலுவலர் பிரிவில் மிக வறுமையான கிராமங்களே, இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

“கிராம சக்தித் திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .