Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 07 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்துக்கு கிடைத்த 5,000 தடுப்பூசிகளைக் கொண்டு, ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகளை ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (07) நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மற்றும் தொற்று நிலைவரம் தொடர்பான ஊடக சந்திப்பில் வைத்தே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில், கிளிநொச்சி மாவட்ட மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது போன்று தென்படவில்லை என்றும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற போது, மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.
இருப்பினும், கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக இருக்கின்றதென்றார்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 5,000 தடுப்பூசிகளில் குறைந்தளவிலான தடுப்பூசிகளே ஏற்றி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில், அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில், இதில் உள்ள தடுப்பூசிகளைக் கொண்டு, ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago